வட அமெரிக்கா

சடலமாக கண்டெடுக்கப்பட்ட தந்தையும் குழந்தைகளும்: கனடாவில் அதிரவைத்த சம்பவம்

கனடாவின் கியூபெக் மாகாணத்தில், ஒரு தந்தையும் அவரது பிள்ளைகளான இரட்டைக் குழந்தைகளும் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கியூபெக் மாகாணத்திலுள்ள Lanaudière என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு அழைக்கப்பட்ட பொலிஸார், அங்கு ஒரு ஆணும், இரண்டு குழந்தைகளும் உயிரற்ற நிலையில் கிடப்பதைக் கண்டுள்ளனர்.

அந்த நபரின் பெயர் Ianik Lamontagne (46) என்றும், அந்தப் பிள்ளைகளுடைய பெயர்கள் Antoine மற்றும் Tristan என்றும் தெரியவந்துள்ளது.3 வயதான அந்தக் குழந்தைகள் இருவரும் இரட்டையர்கள் ஆவர்.

உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட தந்தையும் குழந்தைகளும்: கனடாவில் அதிரவைக்கும் ஒரு சம்பவம் | Father And 2 Sons Body Found Quebec City

Ianik, தன் குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்தக் குழந்தைகளின் தாய் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இட்டைக் குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!