கல்வியை மேம்படுத்த சவூதி அரேபியாவில் கொண்டுவரப்படும் நடைமுறை
சவூதி அரேபியாவில் உள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் சரியான காரணமின்றி 20 நாட்கள் விடுமுறை எடுத்தால் சிறை தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் தரமான கல்வியை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
ஒரு மாணவர் 20 நாட்களுக்கு ஒரு முறையான காரணமின்றி பள்ளிக்கு வராமல் இருந்தால், அவர்களின் பாதுகாவலர் நாட்டின் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொது வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்று தெரிவித்துள்ளது.
விசாரணை முடிந்ததும், வழக்கு நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும். மாணவர் இல்லாதது குறித்து பெற்றோர் கவனக்குறைவாக இருந்ததாக நிரூபிக்கப்பட்டால், பெற்றோருக்கு எதிராக தகுந்த சிறைத்தண்டனை விதிக்க ஒரு நீதிபதிக்கு அதிகாரம் இருக்கும்.
புதிய கல்வியாண்டில் “சிறந்த படிப்பை” உறுதி செய்வதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றுதெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தேவைப்பட்டால், வழக்கு நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்பு, பாதுகாவலரை அரசுத் தரப்பு விசாரணைக்கு உட்படுத்தலாம்.