சிங்கப்பூரில் கடந்த மாதம் ஏற்பட்டுள்ள மாற்றம்

சிங்கப்பூரின் உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் சென்ற மாதம் 0.9 சதவீதம் குறைந்திருக்கிறது.
ஆனால் உயிரியல் மருத்துவ உற்பத்தித்துறை 1.7 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
பொருளியல் வளர்ச்சிக் கழகம் அந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. பருவத்துக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட மாதாந்திர உற்பத்தி சென்ற மாதம் 4 சதவீதத்திற்கு சற்றே கூடியது.
உயிரியல் மருத்துவத்துறையில் உற்பத்தி வளர்ச்சி சுமார் 7 சதவீதத்தை நெருங்கியது.
ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் போக்குவரத்துப் பொறியியல், மின்னியல், ரசாயனப் பொருள்கள், துல்லியப் பொறியியல் உள்ளிட்ட துறைகளும் வளர்ச்சி அடைந்துள்ளன.
மாதாந்திர உற்பத்தி குறித்த அடுத்த அறிக்கை அடுத்த மாதம் 26 ஆம் திகதி வெளியிடப்படும்.
(Visited 15 times, 1 visits today)