சிங்கப்பூரில் 12 பிரம்படிகளை தண்டனையாக பெறும் அபாயத்தில் வெளிநாட்டவர்!
சிங்கப்பூரில் பெண் ஒருவரின் கைப்பையை கொள்ளையடிக்க முயற்சி செய்த சந்தேகத்தின் பேரில் 48 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த கைப்பையில் வெறும் 10 சிங்கப்பூர் வெள்ளியும், சில இதர பொருட்கள் மட்டுமே இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் உட்லண்ட்ஸ் அவென்யூ 7 இல் கடந்த ஒகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் 30 வயதுமிக்க பாதிக்கப்பட்ட பெண், சம்பவம் நடந்த 10 நிமிடங்களில் பொலிஸார் முறைப்பாடு செய்துள்ளனர். அதன் பின்னர் கேமராக்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார் அவரின் அடையாளங்களை கண்டறிந்தது.
அவர் 40 வயதுமிக்க சீன நாட்டவர் என்றும், முறைப்பாடு செய்த 24 மணி நேரத்திற்குள் அவரைக் கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் கைப்பையும் மீட்கப்பட்டது. குறித்த நபர் மீது ஒகஸ்ட் மாதம் 22ஆம் திகதியன்று கொள்ளைக் குற்றத்திற்காக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டுகளில் இருந்து 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனையை எதிர்கொள்ள நேரிடலாம். மேலும் குறைந்தபட்சம் 12 பிரம்படிகள் விதிக்கப்படலாம்.