பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் கொள்ளையிடப்பட்ட பொருட்கள் தொடர்பில் நபர் ஒருவரிடம் விசாரணை!
பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் இருந்து பொருட்கள் திருடப்பட்டமை குறித்து லண்டனின் பெருநகர காவல்துறை நபர் ஒருவரிடம் விசாரணைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிமு 15 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 19 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியைச் சேர்ந்த தங்க நகைகள் மற்றும் இரத்தினங்கள் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனதாகவும், திருடப்பட்டதாகவும் கண்டறியப்பட்டதையடுத்து, கடந்த வாரம் ஊழியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக தற்போது நபர் ஒருவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேநேரம் இது குறித்த விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என மெட் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட பொருட்களில் பெரும்பாலானவை ஸ்டோர்ரூமில் வைக்கப்பட்டிருந்த சிறிய துண்டுகள் என்று அருங்காட்சியகம் தெரிவித்துள்ளதுடன், திருடியவருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியது.