குடு கயானியின் வீட்டை பறிமுதல் செய்ய நடவடிக்கை!

போதைப்பொருள் கடத்தல் காரணமாக தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள “குடு கயானி” என்றழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர் கயானி தில்ருக்ஷியின் விசாலமான வீட்டை பறிமுதல் செய்யும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வு பிரிவின் சைபர் மோசடி விசாரணை பிரிவினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
2019 ஆம் ஆண்டு முதல் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் அவர் இந்த வீட்டைக் கட்டியுள்ளார் என்றும், கட்டப்பட்டு வரும் வீட்டின் மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய் என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வீடு கட்டுவதற்கு பணம் எப்படி கிடைத்தது என்பதை தெரிவிக்காததால் மூடப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
(Visited 13 times, 1 visits today)