பிரிக்ஸ் மாநாட்டில் அதிபருக்கு பதில் பங்கேற்ற சீன வர்த்தக அமைச்சர்
தென்னாபிரிப்பாவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் வர்த்தக மன்ற தலைவர்களின் முக்கிய கூட்டத்தை சீன அதிபர் ஜி ஷின்பிங் புறக்கணித்தார்.
பிரிக்ஸ் மாநாட்டுக்காக தென்னாபிரிக்கா வந்த சீன அதிபர், அந்நாட்டு அதிபர் சிரில் ராமஃபோசாவை நேரில் சந்தித்து பேசிய நிலையில், அதன் பின்னர் நடைபெற்ற முக்கிய கூட்டத்தை புறக்கணித்துளார்.
கூட்டத்தில் பிரதமர் மோடி தென்னாபிரிக்க அதிபர் சிரில் ராமஃபோசா, பிரேசில் அதிபர் லூலா டா சில்வா உள்ளிட்டோர் உரையாற்றிய வரிசையில் சீன அதிபருக்கு பதில் அவர் சார்பில் சீன வர்த்தக அமைச்சர் வாங்-வெண்டாவோ அறிக்கை ஒன்றை வாசித்தார்.
வளரும் நாடுகளுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டும் நாடுகளை சாடிய அவர் அவர்களின் சதித்திட்டம் பலிக்காது என்று கூறினார்.
இந்த கூட்டத்தில் ஜி ஜின்பிங் பங்கேற்காகது குறித்து சீனா தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை . இதனிடையே, உக்ரைன் போர்க் குற்றத்திற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரண்ட் காரணமாக பிரிக்ஸ் மாநாட்டில் நேரிடையாக கலந்துகொள்ளாத ரஷ்ய அதிபர் புதின் காணொலி வாயிலாக கூட்டத்தில் பங்கேற்றார்.