ஐரோப்பா

பொருளாதார தடைகள் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை விமர்சித்த புதின்

அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளின் சட்டவிரோதமான பொருளாதாரத் தடைகளால் சர்வதேச பொருளாதார நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் பிரிக்ஸ் கூட்டமைப்பு மாநாட்டில் காணொளி வாயிலாக ரஷ்ய அதிபர் புதின் உரை நிகழ்த்தினார்.

சில நாடுகளில் ரஷ்யாவின் சொத்துகள் முடக்கப்பட்டதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டதும் சட்டவிரோதமானது என்றும் புதின் தெரிவித்தார்.

பொருளாதார வாழ்வையும், சுதந்திரமான வர்த்தகத்திற்கான அடிப்படை விதிகளையும் நசுக்குவதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை புதின் கடுமையாக விமர்சித்தார்.

இந்த பொருளாதார தடைகளால் காய்கறிகள் வேளாண் பொருட்களின் விலை உயர்வு காரணமாக பணவீக்கம் அதிகரித்து ஏழை நாடுகளை அதிகமாக பாதித்து இருப்பதாகவும் புதின் தெரிவித்தார்.

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்