யாழ். விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான அமெரிக்க தூதர்

இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்தார்.
பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமெரிக்க தூதர், பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடிய அமெரிக்க தூதர் வடக்கு மாகாணத்திற்கான சமூகப் பொருளாதார சவால்கள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பாக கலந்துரையாடினார்.
யாழ்ப்பாணம் பொது சன நூலகத்துக்கு இன்று காலை விஜயம் செய்து பார்வையிட்டார்.
(Visited 17 times, 1 visits today)