ஜெர்மனியில் கத்தியுடன் சுற்றி திரிந்த மர்ம நபருக்கு நேர்ந்த கதி
ஜெர்மனி – நியுஸ்பேர்க்கில் நபர் ஒருவர் கத்தியோடு காணப்பட்டுள்ள நிலையில பொலிஸார் சரமாரியான துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுள்ளனர்.
17ஆம் திகதி இல் நியுஸ்பேர்க் நகரத்தில் பொலிஸார் ஒருவர் நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டதாக தெரியவந்துள்ளது. தற்போதே செய்தி வெளியாகியுள்ளது.
அதாவது நியுஸ்பேர்க் நகரத்தில் ஒரு நபரானவர் கத்தி ஒன்றுடன் பொலிஸார் மீது வன்முறையை பிரயோகித்துள்ளனர்.
அதனால் பொலிஸார் குறித்த நபரிடம் கத்தியை கீழே போடுமாறு எச்சரித்துள்ளார். இருப்பினும் குறித்த நபர் வேண்டுதலுக்கு செவிசாய்க்க வில்லை என தெரியவந்து இருக்கின்றது.
அதனால் பொலிஸார் தம்மை பாதுகாப்பதற்காக குறித்த நபர் மீது சரமாரியான துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் எஸன் மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டு 5640 இவ்வகையான கத்தி குத்து நடைபெற்றுள்ளதாகவும், மேலும் 5383 நபர்கள் கத்தி குத்து சம்பவங்களில் ஈடுப்பட்ட நிலையில் 47 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.