அம்பாறையில் உணவகங்களை சோதனையிட்ட அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அம்பாறை மாவட்டத்தில் உள்ள உணவங்களில் நேற்றைய தினம்(21.08) நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரிகளால் ”உணவே மருந்து- மருந்தே உணவு” எனும் தொனிப்பொருளில் திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன்போது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற மரக்கறிகள்,அழுக்கான பாத்திரங்கள் மற்றும் ஒரு தடவை உபயோகித்த பின்னர் மீள்பாவனைக்காக வைக்கப்பட்ட எண்ணெய் கொள்கலன்கள் என்பன அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.
இதேவேளை மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள் மற்றும் தூய்மையைப் பேணாத உணவகங்கள் குறித்து பொதுமக்கள் 0672250834 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறும் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம்.றயீஸ் பொதுமக்களை கேட்டுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)