இலங்கையில் தலைத்தூக்கும் துப்பாக்கி கலாச்சாரம்!

இலங்கையில் அண்மைக்காலங்களாக துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் (ஆகஸ்ட்) வரை சுமார் 60 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதில் 36 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த அவர், இந்த புள்ளிவிவரங்கள் மாறலாம் எனவும், இதுவரை 28 பேர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)