இலங்கை

குருந்தூர் மலையில் பக்தர்களுக்கு இடையூறு விளைவித்ததாக முறைப்பாடு!

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்பட்ட பொங்கல் நிகழ்வில் பக்தர்களுக்கு இடையூறு விளைவித்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொண்டு பொங்கல் பண்டிகையை ஏற்பாடு செய்ததாகவும், இந்து மக்களின் உரிமைகளுக்கு எதிராக சிங்கள பௌத்த சக்திகள் செயற்பட்டதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 18ம் திகதி குருந்தி கோவில் அருகே பொங்கல் நிகழ்வு நடபெற்ற போது, சிங்களவர்கள் ஆசி வழங்கும் நிகழ்ச்சி நடத்த சென்றதால், இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்