மெக்சிகோவில் உயரமான மலையில் ஏறிய 4 பேர் மரணம்
மெக்சிகோவின் மிக உயரமான Pico de Orizaba மலையை ஏறிக்கொண்டிருந்த நால்வர் விழுந்து உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
நால்வரும் மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்ட்டுள்ளனர். 5,600 மீட்டர் உயரங்கொண்ட பிக்கோ டெ ஒரிசபா (Pico de Orizaba) மலை, வட அமெரிக்காவின் ஆக உயரமான எரிமலையாகும்.
உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் முயற்சி தொடர்வதாக அந்நாட்டின் அரசாங்கம் Facebook பக்கத்தில் தெரிவித்தது.
மலையின் தென்புறப் பகுதியிலிருந்து ஏறியபோது விபத்து நேர்ந்தது. இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில், பெர்லா திஜெரினா (Perla Tijerina) எனும் மலையேறி, பிக்கோ டெ ஒரிசபா மலை உச்சியில் 32 நாள்கள் இருந்தார்.
மெக்சிகோவைச் சேர்ந்த அவர், துணிச்சலை வெளிக்காட்ட அவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.
(Visited 4 times, 1 visits today)