கர்நாடகாவில் விவசாய நிலத்தில் விழுந்து நொறுங்கிய ஆளில்லா விமானம்!
இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிற்கு சொந்தமான ஆளில்லா விமானம் ஒன்று கர்நாடகாவில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்திய ராணுவத்திற்கு தேவையான ஆயுத தளவாடங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட நவீன ஆயுத உற்பத்தியில் இந்திய ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு கழகம் மேற்கொண்டு வருகிறது.
டி.ஆர்.டி.ஓ என்று அழைக்கப்படும் இந்த அமைப்பானது ஏவுகணை சோதனை மற்றும் விமானங்கள் சோதனையை அவ்வப்போது நடத்துவது வழக்கம்.
அந்த வையில், இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிற்கு சொந்தமான ஒரு ஆளில்லா விமானம் (Tapas 07A) இன்று வழக்கமான சோதனைக்கு சென்றது. அப்போது எதிர்பாரத விதமாக கர்நாடகா மாநில சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் விவசாய நிலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமான விபத்துக்குள்ளானதும் அந்த இடத்தில் சத்தம் கேட்டதோடு தீ பிடித்தது எரிந்து புகை வெளியேறியது.
இதை கவனித்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசாரும் விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் கிராம மக்கள் அதிக அளவில் கூடியதால் போலீசார்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.