பயனாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் ஆப்பிள்!
ஆப்பிள் நிறுவனம் குறிப்பிட்ட மாடலுக்கு செயல் திறனை குறைத்ததாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கு இழப்பீடாக புகார் அளித்தவர்களுக்கு 5000 ரூபாய் தர ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகின் முன்னணி போன் நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு சில மாடல்களில் வேண்டுமென்றே செயல் திறனை குறைத்து போனை விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இவ்வாறு ஐபோன் 6, ஐபோன் எஸ் இ மாடல் மோசம் என்ற குற்றச்சாட்டு அதிகரிக்க தொடங்கியது. இதனால் வாடிக்கையாளர்கள் பலரும் ஆப்பிள் நிறுவனத்துடன் சண்டையிட்டதும் குறிப்பிடத்தக்கது. இது உலகம் முழுவதும் ஆப்பிள் நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை இழக்கவும் காரணமாக அமைந்தது.
இதைத்தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் வேகம் குறைக்கப்பட்டதாக ஒப்புக்கொண்டது. ஆனால் இதில் எந்த கெட்ட எண்ணமும் இல்லை என்றும் விளக்கம் அளித்து இருந்தது. இதைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு சட்டப் பிரச்சனைகளை தடுக்கும் வகையில் 500 மில்லியன் கணிசமான பணம் தரவும் ஒப்புக் கொண்டது.
இந்த நிலையில் சிலிக்கான் வேலி அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது, அந்த அறிவிப்பில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 6, ஐ போன் 6 பிளஸ், ஐபோன் எஸ்இ, ஐபோன் எஸ் பிளாஸ், ஐபோன் 7 ஆகிய மாடல்களில் செயல்திறன் குறைக்கப்பட்டதை ஆப்பிள் நிறுவனமே ஒப்புக்கொண்டது.
இதை அடுத்து ஆப்பிள் நிறுவனத்தின் குறிப்பிட்ட ஐபோன் குறித்து தொடர்ந்து தெரிவிக்கப்பட்ட புகார்கள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 6 தேதி வரை புகார் அளித்தவர்கள் மேலும் எண்ணை பதிவு செய்தவர்களுக்கு இழப்பீடு வழங்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாக புகார் அளித்து எண்ணை பதிவு செய்தவர்களுக்கு வங்கி மூலமாகவோ அல்லது அஞ்சல் அல்லது காசோலை மூலமாகவோ இழப்பீடாக 5000 ரூபாய் தர ஒப்புக் கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.