இலங்கையின் தேசிய பாதுகாப்பு குறித்து மீளாய்வு!

பொருளாதாரப் போக்குகள், காலநிலை மாற்றம் உள்ளிட்ட அனைத்து காரணிகளையும் மையமாக வைத்து இந்த நாட்டில் தேசிய பாதுகாப்பு குறித்து மீளாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக்க தலைமையிலான குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர் தேசிய பாதுகாப்பு சபையின் நவீன பாதுகாப்பு கொள்கைகளை வகுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
புஸ்ஸ கடற்படையின் தொண்டர் படையின் மேம்பட்ட கடற்படை பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற வண்ணம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 14 times, 1 visits today)