சோளத்திற்கான இறக்குமதி வரி குறைப்பு

சோளத்திற்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரி திருத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சரின் கூற்றுப்படி,1 கிலோ சோளத்திற்கு விதிக்கப்பட்ட 75 ரூபா இறக்குமதி வரி நேற்று (17) இரவு முதல் 25 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
சோளத்தை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் கால்நடை தீவனத்தின் விலையை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
(Visited 14 times, 1 visits today)