குருந்தூர் மலையில் அதிகரிக்கும் பதற்றம் : கலக தடுப்பு பிரிவினருக்கும் அழைப்பு!

குருந்தூர் மலையில் 03 நாட்களுக்கு ரதனசூத்திரம் ஓதுவதற்கான ஏற்பாடுகள் இன்று (18) பிக்குகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்காக பொது பக்தர்களின் குழுவும் இணைந்தது.
இதற்கிடையில், குறித்த பகுதியில் ஒன்றுக்கூடிய யாழ் மக்களும், பூஜை நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
இதனால் பிக்குகளுக்கும், தமிழர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது,
பின்னர் பொலிசார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்ததுடன் தற்போது கலவர தடுப்பு பிரிவினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
(Visited 7 times, 1 visits today)