கனடாவில் அவசரமாக வெளியேற்றப்படும் மக்கள்
கனடாவின் வடக்கே தொலைதூரத்திலுள்ள மிகப் பெரிய நகரமான Yellowknifeஇல் இருந்து சுமார் 20,000 குடியிருப்பாளர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த வார இறுதிக்குள் அந்த நகரத்தைக் காட்டுத்தீ நெருங்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்று பகல் நேரத்துக்குள் நகரத்தை விட்டு அனைவரும் வெளியேறிவிட வேண்டும் என்று காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை இரவு வரைக்குமான நிலவரப்படி, நகரத்திலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் காட்டுத்தீ எரிந்துகொண்டிருந்தது.
இதற்கிடையே Hay River நகர மக்களும் காட்டுத்தீயை எதிர்நோக்கியுள்ளனர்.
நகரத்தை விட்டு வெளியேறும்போது தங்களது காரில் தீப்பற்றிக் கொண்டதாகப் பொதுமக்களில் ஒருவர் தெரிவித்தார்.
200க்கும் அதிகமான காட்டுத்தீச் சம்பவங்கள் ஏற்பட்டிருப்பதால் வடமேற்குப் பிரதேசங்களில் நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய வரலாற்றில் இது மிக மோசமான காட்டுத்தீப் பருவமாகக் கருதப்படுகிறது. நாடு முழுதும் 1,100 இடங்களில் காட்டுத்தீ இன்னும் எரிந்துகொண்டிருக்கிறது.
வழக்கத்துக்கு மாறான வெப்பமும் வறட்சியும்தான் இந்த நிலைக்குக் காரணம் என்று நிபுணர்கள் கூறினர்.