சிங்கப்பூரில் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை!
சிங்கப்பூரில் குற்றவாளிகள் குற்றத்தை முன்கூட்டியே ஒப்புக்கொண்டால் அத்தகையோருக்கான தண்டனை 30 சதவீதம் வரை குறைக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தண்டனைக்குரிய ஆலோசனைக் குழு முன்வைத்த வழிகாட்டிகளில் அதுவும் ஒன்றாகும்.
வழக்குகளுக்கும் சீக்கிரமாகத் தீர்வுகாணப்பட்டால் பாதிக்கப்பட்டோருக்குக் கூடுதல் உதவியாக இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
தற்போது குற்றத்தை ஒப்புக்கொள்வோருக்கான தண்டனைகள் குறைக்கப்படுகின்றன.
ஆலோசனைக் குழு வெளியிட்ட புதிய வழிகாட்டிகள் இப்போதிருக்கும் நடைமுறையை இன்னும் தெளிவாக்குகிறது.
குற்றவாளி ஒருவர் எப்போது குற்றத்தை ஒப்புக்கொள்கிறார் என்பதைப் பொறுத்துத் தண்டனையை எந்த அளவு குறைக்கமுடியும் என்பதை வழிகாட்டி எடுத்துக்கூறுகிறது.
எனினும் குற்றம் சுமத்தப்பட்ட நபர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவேண்டும் என்ற கட்டாயமில்லை.
அவர் தரப்பில் விசாரிக்கப்படுவதற்கு அனுமதி பெறலாம்.
சிங்கப்பூர்ச் சட்டத்தின்கீழ் தண்டனைகளைக் குறைந்தபட்ச அளவுக்குக்கீழ் குறைக்க முடியாது.