ஐரோப்பா

ஜெர்மனியில் நிதி உதவி தொடர்பில் புதிய சட்டம்

ஜெர்மனியில் பிரசவத்தின் பின்னர் குழந்தைகளை பராமறிப்பதற்கு உரிய நிதி வழங்குவது தொடர்பான விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஜெர்மனியில் எல்டன் கில்ட் என்று சொல்லப்படுகின்ற பிரசவ காலத்திற்கு பிறகு குழந்தைகளை பராமறிப்பதற்கு வழங்கப்படும் நிதி உதவி ஆகும்.

அதாவது பிரசவ காலத்திற்கு பிறகு குழந்தைகளை பராமறிப்பதற்காக பெற்றோர் வேலைக்கு செல்லாது விட்டால் இவ்வயைாகன எல்டன் கில்ட் சொல்லப்படுகின்ற விசேட நிதியத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்நிலையில் ஜெர்மன் அரசாங்கமானது எல்டன் கில்ட் என்று சொல்லப்படுகின்ற இந்த விசேட நிதியத்தை பெறுவது தொடர்பான புதிய சட்டம் ஒன்றை 1.1.2024 இல் இருந்து அமுலுக்கு கொண்டு வரவுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதாவது இதுவரை காலங்களிலும் இவ்வாறு பிரசவ காலத்தின் பிறகு பெற்றோர்கள் மொத்தமாக வருடாந்தம் 3 லட்சத்துக்கு மேலான வருமானத்தை பெறுவார்கள் எனில் இவர்கள் இவ்வகையான எல்டன் கில்ட்டை பெற முடியாது.

இந்நிலையில் புதிய சட்டத்தின் அடிப்படையில் தாய், தந்தையர்கள் சேர்ந்து 150000 க்கு மேற்பட்ட வருமானத்தை வருடாந்தம் பெற்றால் இவர்களுக்கு இவ்வகையான எல்டன் கில்ட்டை பெற முடியாது என்று சட்டம் அமுலுக்கு கொண்டு வரவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு புதிய திட்டமானது அமுலுக்கு கொண்டு வந்தால் அரசாங்கமானது 500 மில்லியன் யுரோக்களை மிகுதிப்படுத்த முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!