கூகுள் நிறுவனத்திற்கு இலங்கை நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு: சிஐடி விரிவான விசாரணை ஆரம்பம்
பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் மிகவும் தனிப்பட்ட பாலியல் தகவல்களை ஆன்லைனில் பெற்ற வழக்கு தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இது தொடர்பில் திணைக்களம் அண்மையில் நீதிமன்றத்திற்கு அறிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
களனி பல்கலைக்கழக விரிவுரையாளர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பெண்களின் பாலியல் நடத்தை மற்றும் அணுகுமுறைகள் பற்றிய தகவல்களைப் பெறுவது என்ற போர்வையில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மிகவும் தனிப்பட்ட பாலியல் தகவல்களைப் பெறுவதற்கு இணையத்தில் கூகுள் படிவம் பரிமாறப்படுகிறது என்று தொடர்புடைய புகாரில் கூறப்பட்டுள்ளது.
அந்த கூகுள் படிவத்தின் படி, ஏராளமான பல்கலைகழக மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் தங்களின் மிகவும் அந்தரங்கமான பாலியல் தகவல்களை கொடுத்தது தெரியவந்தது.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கூகுள் நிறுவனத்திடம் இருந்து தகவல்களை பெற்று மேலதிக விசாரணைகளை மேற்கொள்வார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
தொடர்புடைய கூகுள் படிவத்தின் ஊடாக பெறப்பட்ட தகவல்கள் தொடர்பான விரிவான அறிக்கையை வழங்க கொழும்பு மேலதிக நீதவான் ரி.என்.எல்.இலங்கசிங்கவி கூகுளுக்கு உத்தரவிட்டுள்ளார்.