ஹோமாமை பகுதியில் பாரிய தீவிபத்து!!! பொது மக்களுக்கு அவசர அறிவிப்பு

ஹோமாகமையை அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்கள் முகக்கவசம் அணியுமாறு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளரினால் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
ஹோமாகம பகுதியில் உள்ள இரசாயன களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்படக்கூடிய சுவாச பிரச்சனைகளை குறைப்பதற்காகவே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தொழிற்பேட்டையில் உள்ள இரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த 7 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்று இரவு 8.30 மணியளவில் ஏற்பட்ட தீ தொடர்ந்தும் நீடிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கோட்டை நகரசபையின் தீயணைப்புப் பிரிவினரும் ஹொரணை நகரசபையின் தீயணைப்புப் பிரிவினரும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
(Visited 16 times, 1 visits today)