பாகிஸ்தானில் மீண்டும் வன்முறை அதிகரித்துள்ளது
பாகிஸ்தானில் மீண்டும் வன்முறை அதிகரித்துள்ளது.
புனித குர்ஆனை சேதப்படுத்திய வழக்கை அடிப்படையாகக் கொண்டு வனமுறை தீவிரமாகியுள்ளது.
குரான் நகலை சேதப்படுத்தியதாகவும், அதை அவமதித்ததாகவும் இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டதால் இந்த வன்முறைச் செயல்கள் நடந்துள்ளன.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் அதிகளவில் வன்முறைகள் நடந்துள்ளன.
04 கிறிஸ்தவ தேவாலயங்களை நூற்றுக்கணக்கான முஸ்லிம் குடியிருப்பாளர்கள் தாக்கி தீ வைத்து எரித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், பல கிறிஸ்தவ பக்தர்களின் வீடுகள் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், வன்முறைச் செயல்களால் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள், எரிப்பு மற்றும் கிறிஸ்தவ வீடுகள் மீதான தாக்குதல்கள் குறித்து அமெரிக்கா தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் குர்ஆனை நிந்தித்தால் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.