கொழும்பில் அத்துமீறி கைப்பற்றப்பட்ட காணி!

கொழும்பு, இசிபதன மாவத்தையில் அமைந்துள்ள அரை ஏக்கருக்கும் சற்று அதிகமான காணி ஒன்று அத்துமீறி நுழைந்த குழுவினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (16.08) இரவு இடம்பெற்றுள்ளது.
காணியில் இருந்த மக்கள் தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காணியின் உரிமையாளர் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் எனவும் அவர் தற்போது வெளிநாட்டில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சமீபத்தில் பல சர்ச்சைக்குரிய செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அரச பதவி வகிக்கும் ஒருவே இந்த செயலின் பின்னாள் இருப்பதாகவும் தெரிவிக்க்பபடுகிறது.
(Visited 11 times, 1 visits today)