எல்லை பிரச்சினையை தீர்க்க 19வது சுற்றுப் பேச்சுவார்த்தை
இந்தியா சீனா இடையிலான ராணுவ மட்டத்தில் 19வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
எல்லையில் சீனப்படைகள் குறைப்பதற்காக இந்தியாவின் இடைவிடாத முயற்சியின் ஒருபகுதியாக லடாக்கின் சூசுல் பகுதியில் நேற்று இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் சந்தித்து பேச்சு நடத்தினர். காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30மணிக்கு பேச்சுக்கள் நிறைவு பெற்றன.
இந்தப் பேச்சு வார்த்தையின் விவரங்கள் ஓரிரு நாளில் கைட்டு அறிக்கையாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டொம்பர் மாதம் 9மற்றும் 10ம் திகதிகளில் பிரதமர் மோடி சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை ஜி20 மாநாட்டின் இடையே சந்திக்க உள்ளார்.
அதற்கு முன்னதாக வருகிற 22 முதல் 24ம் திகதி வரை தென் ஆபிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டிற்கு மத்தியிலும் இரு தலைவர்களும் சந்ந்திக்க உள்ளனர.
(Visited 9 times, 1 visits today)