கலிபோர்னியாவில் காட்டுத் தீயைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு
கலிபோர்னியாவில் காட்டுத் தீயைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த அம்மாநில தீயணைப்பு வீரர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
காட்டுத் தீ ஏற்பட்டால் அதை உடனடியாக கண்டறிய மாநிலம் முழுவதும் 1000 கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த வீடியோக்கள் அனைத்தும் ஒரே இடத்தில் இருந்து பார்க்கும் வகையில் தொழில்நுட்ப இயந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதுடன், தீ விபத்து ஏற்பட்டவுடன் சம்பந்தப்பட்ட இயந்திரம் எச்சரிக்கை சமிக்ஞைகளை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சான் டியாகோவிலிருந்து கிழக்கே 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிளீவ்லேண்ட் தேசிய பூங்காவில் ஏற்பட்ட தீ, கடந்த மாதம் ஒரு நாளில் அதே கேமராவால் பார்க்கப்பட்டது.
(Visited 3 times, 1 visits today)