கொழும்பு வந்த சீன போர் கப்பலால் அச்சத்தில் இந்தியா
கொழும்பு துறைமுகத்திற்கு சீன போர்க்கப்பல் வருகை தொடர்பில் இந்தியாவின் கவனம் குவிந்துள்ளது.
சீனாவுக்கு சொந்தமான போர்க்கப்பல் ஒன்று கடந்த வியாழக்கிழமை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.
Hai Yang Twenty Four என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இலங்கை வந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. 129 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 138 பணியாளர்கள் உள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பாவோ ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவின் பாதுகாப்பு நலன்களைப் பாதிக்கும் எந்தவொரு சம்பவமும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் என்று ஊடகப் பேச்சாளர் கூறினார்.
அதன்பிறகு, தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசுக்கு வலியுறுத்தப்படும் என்று இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாவோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும், பாதுகாப்புக்கான அனைத்து முக்கிய நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று கொழும்பை வந்தடைந்த சீனாவிற்கு சொந்தமான இந்த போர்க்கப்பல் இன்று தீவை விட்டு புறப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.