தினசரி செலவுகளுக்காக கடன் வாங்கும் அரசாங்கம் – முதல் காலாண்டில் எவ்வளவு வாங்கியுள்ளது தெரியுமா?
அரசு சேவைகளை நடத்த தினமும் 543 கோடி ரூபாய் கடன் வாங்க வேண்டியுள்ளதாக நிதியமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள, நிதியமைச்சின் அறிக்கைகளில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் தனது செலவீனத்தில் 91 வீதத்தை தொடர் செலவினங்களுக்கு அதாவது சம்பளத்திற்கு செலவிடுவதாகவும், மூலதனச் செலவில் 9 வீதத்தையே செலவிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் அரசாங்கத்தின் சராசரி நாளாந்தச் செலவு 1425 கோடி ரூபாவாகவும் அரசாங்கத்தின் சராசரி நாளாந்த வருமானம் 748 கோடி ரூபாவாகவும் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் அனைத்து செலவுகளையும் சமாளிக்க நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 677 கோடி ரூபாய் கடன் வாங்க வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.