இலங்கை செய்தி

கொழும்பு நோக்கி வந்த ரயிலின் இயந்திரம் தனியாக பிரிந்துசென்ற காட்சி!! காணொளி

காலியில் இருந்து மருதானை நோக்கி பயணித்த சமுத்திராதேவி ரயிலின் இயந்திரம் மற்றும் பெட்டிகள் பிரிந்து செல்லும் காட்சிகள் CCTV காணொளியாக வெளியாகியுள்ளது.

சமுத்திராதேவி புகையிரதம் இன்று (09) காலை களுத்துறை வடக்கு புகையிரத நிலையத்தை கடந்து செல்லும் போது விபத்துக்குள்ளானதாக எமது உள்ளூர் செய்தியாளர் தெரிவித்தார்.

பெட்டிகளில் இருந்து இன்ஜின் பிரிந்தவுடன்  சமுத்திராதேவியின் வண்டிகள் களுத்துறை வடக்கு – நாகை சந்தி பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன.

ரயில் இன்ஜின் வண்டிகளில் இருந்து பிரிந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சுமார் 15 நிமிடங்களில், ரயில் இன்ஜின் மீண்டும் ரயில் பெட்டிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு நிறுவப்பட்டு மீண்டும் மருதானைக்கு இயக்கப்பட்டது.

ரயிலில் பயணம் செய்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை, இதன் காரணமாக சமுத்திராதேவி ரயில் இன்று சுமார் 20 நிமிடங்கள் தாமதமாக சென்றது.

 

https://youtu.be/zdk4od5Vht0

 

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!