சிங்கப்பூரில் 4,000 இளம் வெளிநாட்டு ஊழியர்களுக்கு குடிமக்கள் அந்தஸ்து!
சிங்கப்பூரில் 4,000 இளம் வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் குடியுரிமையைப் பெற்றுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 4,000 இளம் வெளிநாட்டு ஊழியர்கள் இவ்வாறு குடியுரிமையைப் பெற்றுள்ளனர்.
சிங்கப்பூர் அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் சிறந்த வேலை வாய்ப்புகள் ஆகியவையே அதற்கான முக்கிய காரணமாக சொல்லப்பட்டுள்ளது. அவர்கள் இந்தோனேசிய நாட்டை சேர்த்தவர்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
2045ஆம் ஆண்டுக்குள் தென்கிழக்கு ஆசியாவில் வளர்ந்த நாடாக இந்தோனேசியா மாறும் என்ற இலக்கை இது சிதைத்துவிடும் என அந்நாட்டு அதிகாரிகள் அச்சம் கொண்டு எச்சரிக்கை செய்துள்ளனர்.
அந்நாட்டின் குடிமக்கள் குறிப்பாக திறமையான இளைஞர்கள் சிங்கப்பூர் குடிமக்களாக மாறிவருவது அந்நாட்டுக்கு கவலையை அளித்துள்ளது.
2019 மற்றும் 2022 ஆகிய காலகட்டத்தில் மட்டும் சுமார் 3,912 இந்தோனேசியர்கள் சிங்கப்பூர் குடிமக்கள் என்ற அந்தஸ்தை பெற்றதாக அந்நாட்டு குடிநுழைவு அலுவலகம் கூறியுள்ளது.
அவர்கள் 25 முதல் 35 வயதுக்கு உட்பட்ட படித்த பட்டதாரிகள் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.