குடி நீர் கிணற்றில் பாம்பை கொன்று வீசிய நாசகரர்கள்

பிபில மெதகம பிரதேசத்தில் உள்ள குடிநீர் கிணற்றில் பாம்பு ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
தனிப்பட்ட தகராறு காரணமாக செத்த பாம்பை கிணற்றில் வீசியதாக கூறப்படுகிறது. இக்கிணற்றின் மூலம் பிரதேசத்தில் உள்ள 04 குடும்பங்கள் தமது குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அப்பகுதி மக்கள் கிணற்றை பார்த்தபோது, பாம்பு கொன்று கிணற்றில் போட்டுள்ளனர்.
இது தொடர்பில் மெதகம சுகாதார வைத்திய அதிகாரிக்கு அறிவித்ததன் பின்னர் மெதகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Visited 13 times, 1 visits today)