இம்ரான் கானுக்கு 5 ஆண்டுகள் அரசியலில் ஈடுபட தடை !

ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது தண்டனைக்கு ஏற்ப தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் (ECP) செவ்வாய்கிழமை ஒரு உத்தரவில் தெரிவித்துள்ளது.
இம்ரான் அஹ்மத் கான் நியாசி ஐந்தாண்டு காலத்திற்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கானின் தொகுதி இப்போது காலியாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தபோது வெளிநாட்டில் இருந்து பெற்ற சொத்துக்களை தவறாகக் கூறியதற்காக கான், சனிக்கிழமையன்று மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
(Visited 11 times, 1 visits today)