இலங்கையில் குழந்தைகளை ஊக்கப்படுத்திய சச்சின் டெண்டுல்கர்
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சித் டெண்டுல்கர் UNICEF அமைப்பின் தொடர் நிகழ்ச்சிகளுக்காக நேற்று இலங்கை வந்திருந்தார்.
கொழும்பில் இன்று (08) இடம்பெற்ற மற்றுமொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அங்கு கருத்து வெளியிட்டார்.
அங்கு பேசிய டெண்டுல்கர், கல்வி என்பது வகுப்பறையில் மட்டும் நின்றுவிடக் கூடாது.
கிரிக்கெட் தனக்கு வாழ்க்கையில் பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்ததாகவும், ஒருநாள் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கனவு இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதற்காக கவனத்துடன் பணிபுரியத் தொடங்கியதாகவும், ஒழுக்கமாகவும், திட்டமிட்டு வாழவும் தொடங்கினேன் என்றார்.
வாழ்க்கையில் நல்ல நாட்களும், கெட்ட நாட்களும் இருப்பதாகவும், வாழ்க்கையின் கொண்டாட்டங்களையும் ஏமாற்றங்களையும் சமமாக தாங்கி வந்ததாகவும் குறிப்பிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கையில் உள்ள சிறுவர்களை எந்தவொரு விளையாட்டையும் விளையாட ஊக்குவிப்பதாகவும், விளையாட்டு ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.