திருகோணமலையில் மீனவ குழுக்களிடையே மோதல்; களமிறக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப் படையினர்!

திருகோணமலை விஜிதபுர பகுதியில் தமிழ் – சிங்கள மீனவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் அதிரடிப்படையின களமிறக்கப்பட்டுள்ளனர்.
மீன் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறின்போதே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் மோதல் நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
(Visited 13 times, 1 visits today)