கந்தானையில் ஏற்பட்ட விபரீதம் – 120 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி

கந்தானை இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய பாடசாலை மாணவிகள் குழுவொன்று திடீரென சுகவீனமடைந்துள்ளனர்.
சுகயீனமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 120 க்கும் மேற்பட்ட மாணவிகள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் வைத்தியசாலை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவிகளே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, பாடசாலைகளை நோக்கி பெற்றோர் படையெடுத்தமையால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
(Visited 22 times, 1 visits today)