இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம்

இலங்கையில் வறட்சியான வானிலை காரணமாக பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈட்டை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி இணங்கியுள்ளார்.
இதனை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், பயிர்ச்செய்கை பாதிப்பு தொடர்பான மதிப்பீடுகளை ஆரம்பிக்குமாறு விவசாயம் மற்றும் விவசாயிகள் காப்புறுதி சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன், எம்பிலிபிட்டிய விவசாயிகளுக்கு வெலிஓயா நீர்த்தேக்கத்தில் இருந்து தற்போது குறிப்பிட்டளவு நீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் 15 – 20 வீதமான செய்கைகளை பாதுகாக்க முடியுமென அமைச்சர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)