நைஜர் விவகாரத்தில் கனடா எடுத்துள்ள அதிரடி முடிவு
நைஜர் நாட்டுக்காக இதுவரை வழங்கப்பட்ட நிதி உதவிகளை நிறுத்துவதாக கனடிய அரசாங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நைஜரில் ராணுவ சூழ்ச்சி மூலம் ஆட்சி கைப்பற்றப்பட்டுள்ளது.ஜனநாயக நெறிமுறைகளுக்கு புறம்பான வசையில் நைஜரில் ஆட்சி நிறுவப்பட்டுள்ளமைக்கு கனடிய அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இதேவேளை நைஜருக்கு கனடிய அரசாங்கம் வழங்கி வந்த உதவி திட்டங்களை இடை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ஜனநாயக ரீதியான ஆட்சி மீண்டும் நைஜரியில் நிறுவப்படும் வரையில் உதவிகள் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நேரடியான அனைத்து உதவிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.எவ்வாறெனினும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கனடிய வெளிவிவகார அமைச்சு இந்த விடயத்தை அறிவித்துள்ளது.
(Visited 14 times, 1 visits today)