செய்தி

அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நாளை ஆரம்பம்!

இராம பிரானால் வழிபடப்பட்ட ஆலயம் என்ற பெருமையினையும் பிதிர்கடன் தீர்க்கும் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவத்தினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நாளை திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது.

மூர்த்தி,தீர்த்தம்,தலம் ஆகியனவற்றினை ஒருங்கே கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயமானது கிழக்கிலங்கையில் வரலாற்றுசிறப்புமிக்க ஆலயமாக கருதப்படுகின்றது.

வருடாந்த மஹோற்சவத்தினை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு நடைபெற்றது.

ஆலயத்தில் வீரகத்திப்பிள்ளையார் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ முரசொளிமாறன் குருக்கள் தலைமையில் விசேட பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து கொடிச்சீலை ஆலய வண்ணக்குமார் சகிதம் ஊர்வலமாக ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இந்த கொடிச்சீலையானது மட்டக்களப்பு நகரிலிருந்து பெருமளவான பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.

நாளை திங்கட்கிழமை காலை விசேட பூஜைகள் நடைபெற்று நண்பகல் 12.00மணிக்கு வருடாந்த மஹோற்சவத்தின் கொடியேற்றம் நடைபெறவுள்ளது.

10தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மஹோற்சவத்தில் தினமும் பிற்பகல் தம்ப பூஜை சுவாமி உள் வீதியுலாவும் மாலையில் தம்ப பூஜை,வசந்த மண்டப பூஜை நடைபெற்று சுவாமி உள்வீதியுலா வெளிவீதியுலா நடைபெறவுள்ளது.

See also  டெல்லி-நியூயார்க் விமானத்தில் ஏர் இந்தியா பயணி உணவில் கரப்பான் பூச்சி

எதிர்வரும் 15ஆம் திகதி காலை 7.30மணிக்கு தேரோட்டமும் மறுதினம் 16ஆம் திகதி புதன்கிழமை நண்பகல் 12.00மணிக்கு மாமாங்கேஸ்ரவர் தீர்த்தக்குளத்தில் ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது.

ஆலய வருடாந்த மஹோற்சவத்தினை முன்னிட்டு ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் நன்மை கருதி விசேட போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதுடன் ஆலய வளாகத்தில் பக்தர்களின் நன்மை கருதி பல்வேறு வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

(Visited 19 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content