விபத்தில் இளைஞரொருவர் பரிதாபமாக பலி!
குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பள்ளவக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை- தோப்பூரைச் சேர்ந்த அப்துர்ரஹ்மான்-அன்சார் (சுஜா) (31வயது) எனவும் தெரியவருகிறது.
குறித்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியதில் இவ்விபத்து இடம் பெற்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பில் குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்





