பாக். ரயில் விபத்து – 22 பேர் பலி, 80 பேர் படுகாயம்

பாகிஸ்தானில் இன்று நடந்த ரயில் விபத்தில் 22 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 80 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் கராச்சியிலிருந்து 275 கிமீ தொலைவில் உள்ள இடத்தில் தான் ரயில் விபத்தில் சிக்கிக் கொண்டது. இந்த விபத்தில், இதுவரை 22 பேர் பலியாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹசரா எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டன. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ரெயில் பெட்டிகள் தடம் புரண்டதன் காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சிந்த் மாகாணத்தின் பல்வேறு மருத்துவமனைகளிலும், விபத்துக்குள்ளானோரை அனுமதிக்கும் வகையிலான அவசர மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
(Visited 12 times, 1 visits today)