பரீட்சை திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்!
வெளிவிவகார அமைச்சின் ஊடாக சரி பார்ப்பதற்காக விண்ணப்பிக்கப்படும் பரீட்சை சான்றிதழ்கள், நாளை மறுதினம் முதல் நிகழ்நிலை முறை மூலம் வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
பரீட்சை திணைக்களம் வெளயிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வெளிவிவகார அமைச்சுக்கு பிரவேசிக்காமல் சான்றளிக்கப்பட்ட பரீட்சை சான்றிதழின் டிஜிட்டல் பிரதியை விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு பெறமுடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
(Visited 16 times, 1 visits today)





