இந்தியா

கார் டிரைவரிடம் உல்லாசம்: இடையூறாக இருந்த கணவரை கொலை செய்த மனைவி..!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ரமேஷ் (35). இவர் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஷிவானி (30). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு பொலிஸ் பணியில் சேர்ந்த ரமேஷ், ஒன் டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். அவர் 2012 இல் ஷிவானியை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், பக்கத்து வீட்டுக்காரரான ரமேஷின் நண்பரான ராமாராவ் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அவர், கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். அப்போது ஷிவானியுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. ரமேஷ் வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

நாளடைவில் அக்கம் பக்கத்தினர் மூலமாக ரமேசுக்கு இந்த விஷயம் தெரியவந்தது. இதனையடுத்து, மனைவியைும், நண்பரான ராமாராவையும் கடுமையாக எச்சரித்துள்ளார். ஆனால், இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அவர்கள் பழகி வந்துள்ளனர். இதனிடையே, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டனர்.

Correcting a friend's wife and flirting.. Her husband who was in the way  was killed.. How

அதன்படி கடந்த 1ம் திகதி பணி முடிந்து வீடு திரும்பிய ரமேசுக்கு மனைவி ஷிவானி மது ஊற்றி கொடுத்ததாக கூறப்படுகிறது. போதையில் மட்டையான ரமேஷை தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்தார். பின்னர், எதுவும் தெரியாதது போல மறுநாள் காலையில் மாரடைப்பால் கணவர் உயிரிழந்ததாக கதறி அழுது நாடகமாடியுள்ளார்.

இது குறித்து ரமேஷின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். சந்தேகத்தின் பேரில் மனைவியிடம் விசாரணை நடத்தப்பட்டு அவரது செல்போனை ஆய்வு செய்தபோது ராமாராவுடன் பலமுறை தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது. பின்னர், அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே