ஊழல் வழக்கில் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை!

தோஷகானா எனப்படும் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
மேலும் இந்த வழக்கில் அவருக்கு பாகிஸ்தான் பணம் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இம்ரான் கான் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திடம் வேண்டுமென்றே போலியான விவரங்களைச் சமர்ப்பித்துள்ளார், மேலும் அவர் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டு உள்ளது என நீதிமன்றம் கூறி உள்ளது.
(Visited 23 times, 1 visits today)