தண்ணீரை திறந்துவிடுமாறு கோரி விவசாயிகள் போராட்டம்!
உடவல நீர்த்தேக்கத்திற்கு தண்ணீரை திறந்துவிடுமாறு கோரி, விவசாயிகள் ஆரம்பித்த போராட்டம் இன்று (05.08) 13ஆவது நாளாகவும் தொடர்கிறது.
விவசாயிகளின் போராட்டம் காரணமாக சமனல குளத்தை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக உடவளவ நீர்த்தேக்கத்தில் நீர் வற்றி வருவதால் அப்பகுதி விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.
வளவ மகாவலி பிரதேசத்தில் உள்ள 12,000 ஹெக்டேயருக்கும் அதிகமான நெல் வயல்களுக்கு உடவலவ நீர்த்தேக்கத்தின் மூலம் நீர் வழங்கப்படுவதுடன், இன்று நீர்த்தேக்கத்தில் செயற்படும் நீரின் வீதம் 1.4 வீதமாகவே காணப்படுகின்றது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக விவசாயத்திற்கான நீரை திறந்து விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சுமார் 86,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.