கச்சத்தீவு விவகாரம்! அண்ணாமலை கருத்து

கச்சத்தீவை மீட்க இந்திய மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
‘என் மண், என் மக்கள்’ எனும் தொனிப்பொருளில் பாதயாத்திரையில் ஈடுபட்ட போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2004 முதல் 2014 வரை இலங்கை கடற்பரப்பில் 85 தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆனால், தற்போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் இதுபோன்ற பாதகமான நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை.
இந்நிலையில், கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்க இந்திய மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
(Visited 19 times, 1 visits today)