இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் இலங்கை பிரஜை ஒருவர் கைது!

10 கிலோ ஹெரோயின் போதைப்பொருளை கட்டாருக்கு கொண்டு செல்ல முயன்ற இலங்கை பிரஜை ஒருவர் இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தோஹா செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் பயணிகளின் பயணப்பொதிகளை பரிசோதித்த போது இந்த போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய இலங்கையர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நாட்டின் போதைப்பொருள் தடுப்புப் படையிடம் (ANF) ஒப்படைக்கப்பட்டுள்ளார், மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்ட மற்ற நபர்களின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 9 times, 1 visits today)