தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்தித்த கோபால் பாக்லே!

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குழு ஒன்று சந்தித்துள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (01.08) காலை இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இக்கலந்துரையாடலுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவொன்று பிரசன்னமாகியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்திய உயர்ஸ்தானிகரின் அழைப்பின் பேரில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதுடன், 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் உள்ளிட்ட பல விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் பின்னர் இந்தக் கலந்துரையாடலை நடத்துவதும் விசேட அம்சமாகும்.
(Visited 17 times, 1 visits today)