ஆகஸ்ட் மாதத்தில் சந்திரனில் ஏற்படும் பெரிய மாற்றம்!!! 2018ஆம் ஆண்டுக்கு பின் நடக்கும் நிகழ்வு
ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு சூப்பர் நிலவுகள் உதயமாகும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆகஸ்ட் முதல் திகதி முதல் சந்திரனைக் காணலாம் என்று கூறப்படுகிறது. இதன்போது நிலவு பூமியில் இருந்து 222,159 மைல் தொலைவில் இருக்கும் என்று வானியலாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், ஆகஸ்ட் 31 ஆம் திகதி, முழு நிலவு 222,043 மைல் தொலைவில் தெரியும். கடந்த 2018ஆம் ஆண்டு ஒரே மாதத்தில் இரண்டு சூப்பர் நிலவுகள் காணப்பட்டன.
இந்த நிலவை பார்க்க வானம் தெளிவாக இருக்க வேண்டும் என்றும், தெளிவான வானில் தோன்றும் நிலவின் நீல நிறத்தை பைனாகுலர் மூலம் பார்க்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சூப்பர் மூன் இயல்பை விட 14 சதவீதம் பெரியதாகவும் 30 சதவீதம் பிரகாசமாகவும் இருக்கிறது. நிலவின் அளவு சுமார் 10 சதவீதம் அதிகரித்தால், அது சூப்பர் மூனாகக் கருதப்படுகிறது.
முழு நிலவு பூமிக்கு மிக அருகில் வரும்போது இந்த சூப்பர் மூன் நிகழ்வு ஏற்படுகிறது.